
`இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய்
பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப்
பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்னும் பெருமைக்குச்
சொந்தக்காரர்.
courtesy: statueofunity
பல்வேறு
மாகாணங்களாக இருந்த இந்தியாவை, சுதந்திரம் பெற்ற பிறகு ஒருங்கிணைத்ததில்
முக்கிய பங்காற்றியவர். இந்தநிலையில் சர்தார் படேலுக்கு குஜராத்
மாநிலத்தின் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து
3.2 கி.மீ தொலைவில் 'சாதுபெட்' என்ற இடத்தில் 182 மீட்டரில் பிரமாண்ட சிலை
அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
அடிக்கல் நாட்டினார்.
மேலும், இதற்கு `ஒருமைப்பாட்டு சிலை' எனப் பெயர் வைக்கப்பட்டது. சிலையுடன்
இந்த வளாகத்திலேயே பெரிய பூங்கா, ஹோட்டல், மாநாடு மையம், பொழுதுபோக்கு
பூங்கா, ஆராய்ச்சி நிலையம், கண்காட்சி மையம் எனப் பல்வேறு சிறப்பு
அம்சங்களுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும்,
உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான
எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்து வந்தது. இரும்பு மனிதர் என்ற
பெயருக்கு ஏற்றாற்போல் இரும்பில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதால் நாடு
முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்தநிலையில் சிலை அமைப்பதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு
விழாவுக்காகத் தயாராக உள்ளது என குஜராத் தலைமைச் செயலாளர் ஜே.என்.சிங்
தெரிவித்துள்ளார். மேலும், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான
அக்டோபர் 31-ம் தேதி அவரது சிலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
என்றும் சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment