
தி.மு.க.,வின் செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலின், கட்சியின்
பொருளாளர் பதவியையும் சேர்த்து வகிக்கிறார். ஏற்கனவே அவரிடம் இருந்த
இன்னொரு பொறுப்பான, இளைஞர் அணி பதவியை வெள்ளக்கோவில் சாமிநாதனிடம்
கொடுத்தது போல, பொருளாளர் பதவியை, முக்கியமானவர் ஒருவருக்கு கொடுக்க
திட்டமிட்டுள்ளார். ஆ.ராஜா: 2 ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆகி இருக்கும்,
கனிமொழிக்கு, பொருளாளர் பதவியை பெற்றுத் தர, அவரது ஆதரவாளர்கள்
விரும்புகின்றனர். அதற்காக, ஸ்டாலினிடம் பலமுறை பேசி
விட்டனர்.இதற்கிடையில், அதே 2 ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆகி இருக்கும்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவும், பொருளாளர் பதவியை பிடிப்பதற்காக,
காய் நகர்த்தத் துவங்கி இருக்கிறார்.
துணைப் பொதுச் செயலராக இருக்கும் நாமக்கல் துரைசாமி தவிர, தலித் இனத்தைச்
சேர்ந்த ஒருவருக்கு, கட்சியில் முக்கிய பதவியை அளிக்கவில்லை. அதனால்,
பொருளாளர் பதவியை கொடுக்க வேண்டும் என்று, அவர் கேட்கத் துவங்கி உள்ளார்.
ஸ்டாலினும், ராஜாவுக்கு கொடுக்கலாமா என்ற யோசனையில் ஆழ்ந்திருப்பததாகக்
கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment