
அவுரங்காபாத்: முஸ்லிம் ஆண்களை தந்திரமாக தண்டிக்கவே 'முத்தலாக்' மசோதாவை
மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என அகில இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி
தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.இதுகுறித்து அவுரங்காபாத்தில் நடந்த
பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஹிந்துத்வா
தலைவர்கள் சாவர்கர், கோல்வல்கர் தத்துவங்களை செயல்படுத்த மத்திய அரசு
முயற்சித்து வருகிறது. இதை ஏற்க முடியாது. பிரதமர் மோடி நாட்டுக்காக
எதையும் செய்யவில்லை. பிறர் செய்யும் பணிகளுக்காக கிடைக்கும் பெயரையும்,
புகழையும் அவர் எடுத்துக்கொள்கிறார்.'முத்தலாக்' மசோதா, முஸ்லிம்களுக்கு
எதிரான சதி; முஸ்லிம் ஆண்களை தண்டிப்பதற்கான தந்திரமாக, இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டு உள்ளது.
முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும், பா.ஜ., எண்ணம், ஒருபோதும்
வெற்றி பெறாது. பத்மாவத் திரைப்படத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கும் மத்திய
அரசு. முத்தலாக் மசோதாவை ஆய்வு செய்ய மறுப்பது ஏன்?. இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment