
தமிழகத்தில் நல்லதொரு அரசியல் மாற்றத்தை
ஏற்படுத்துவோம் என நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் வீடியோ
மூலம் உரை நிகழ்த்திய நடிகர் ரஜினிகாந்த், ஒத்துழைப்பு, ஒழுக்கம்,
கட்டுப்பாட்டோடு பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்னும்
கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிவிக்கப்படாத நிலையில்,
உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வரும் ரஜிகாந்த்,
அதன்தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற
நிர்வாகிகள் கூட்டத்தில், ரஜினி பேசிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டது.
அதில்,
பதவி கிடைக்கவில்லை என கருதாமல், ஒத்துழைப்பு உணர்வோடு மக்களுக்காக உழைக்க
வேண்டும் என்றவர் அரசியல் என்பது பொதுநலம், சுயநலமல்ல என்றும் மக்களுக்கு
நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், இன்று நெல்லையில்
நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், ரஜினி பேசிய வீடியோ
காட்சி வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய நல்லதொரு அரசியல்
மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்றவர் ஒழுக்கம், கண்ணியத்துடன் ரசிகர்கள்
நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment