
தமிழக அரசு
பேருந்துக் கட்டணத்தை குறைத்திருப்பது திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த
வெற்றி என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
பேருந்துக்
கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்
மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து
கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு
எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதுடன் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றன.
இந்நிலையில்,
உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும்,
விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு
பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110
பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்
மூலம் நகர மற்றும் மாநகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.
4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 ஆக
குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சாதாரண
பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆக
இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு நாளை (ஜன.,29)
முதல் அமலுக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து
தமிழக அரசு வெளியிட்ட பேருந்துக் கட்டணம் குறைப்பு வெறும் கண்துடைப்பு,
திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக தெரிவித்துள்ளது.
பேருந்துக்
கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ள
விஜயகாந்த், திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,
திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி கூறுகையில், தமிழக அரசு பேருந்துக்
கட்டணத்தை குறைத்திருப்பது திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என
குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் மீது ஏற்றிவைக்கப்பட்ட சுமை முழுமையாக இறக்கி வைக்கப்படவில்லை என்றும் வெறும் கண் துடைப்பாகவே இந்த அறிவிப்பு உள்ளது என கூறினார்.
மேலும் மக்கள் மீது ஏற்றிவைக்கப்பட்ட சுமை முழுமையாக இறக்கி வைக்கப்படவில்லை என்றும் வெறும் கண் துடைப்பாகவே இந்த அறிவிப்பு உள்ளது என கூறினார்.
No comments:
Post a Comment