
முல்லைப் பெரியாறு அணையில் ஐந்து பேர் கொண்ட துணைக் கண்காணிப்பு குழுவினர் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
முல்லைப்பெரியாறு
அணையில் நாளை (ஜனவரி 29) ஐந்து பேர் கொண்ட துணைக் கண்காணிப்பு குழுவின்
ஆய்வு நடைபெறுகிறது. துணைக் குழுவின் தலைவரான மத்திய நீர்வள ஆணைய
செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆய்வில், தமிழக அரசு
பிரதிநிதிகளான தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்ரமணி, உதவி கோட்ட
பொறியாளர் சாம் இர்வின் மற்றும் கேரள அரசு பிரதிநிதிகளான கேரள
நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல், உதவி பொறியாளர் பிரசீத்
ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பிரதான அணை, பேபி அணை, அணை மதகுகள் ஆகியன
இதில் ஆய்வு செய்யப்படுகின்றன.
அணை நீர்மட்டம், மழைப்பதிவு, நீர் வெளியேற்றம், நீர்வரத்து, அணையின் கசிவு
நீர்வரத்து ஆகியனவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. ஆய்விற்கு பின்,
குமுளியில் உள்ள மூவர் கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஐவர் குழுவின் ஆலோசனை
கூட்டம் நடக்கிறது. இதற்கு முன் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி துணைக்
கண்காணிப்பு குழுவின் ஆய்வு நடைபெற்றது.
No comments:
Post a Comment