ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., தினகரன்,
நாளை கோத்தகிரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில்
கலந்து கொள்வதற்காகச் சென்றபோது, இடையில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸில்
இறங்கி, பத்திரிகையாளர்களையும், அவருடைய கட்சித் தொண்டர்களையும்
சந்தித்தார். அப்போது பேசிய தினகரன், ''எங்களுக்கு அ.தி.மு.க அம்மா அணி
என்று நீதிமன்றம் கூறியதை அடுத்து, நாங்கள் அந்தப் பெயரோடு ஆர்.கே.நகர்
தொகுதி தேர்தலை சந்தித்தோம். கட்சியின் பெயர், கொடி, சின்னம் இல்லாமல்
ஆர்.கே.நகரில் நின்று வெற்றிபெற்றோம். 90 விழுக்காடு கட்சித் தொண்டர்கள்
எங்கள் பக்கம் இருக்கிறார்கள். இந்த வருடத்தில் உள்ளாட்சித் தேர்தல்,
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வர இருக்கின்றன.
உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம்.
அந்தத் தேர்தல்களைச்
சந்திக்க புதிய கட்சி, கொடி அறிவிப்பது பற்றி நாளை மாவட்ட செயலாளர்கள்,
தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பேச இருக்கிறோம். ஓரிரு நாள்களில், அது பற்றிய
அறிவிப்பு வெளியிடுவோம். இதுபற்றி, கடந்த முறை சசிகலாவை சந்தித்துப்
பேசும்போது, 'நீ எந்த முடிவு எடுத்தாலும் சரியான முடிவாகத்தான் இருக்கும்'
என்று கூறினார். கே.பி.முனுசாமி எங்களை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை.
அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இந்த நேரத்தில் அவரைப்
பற்றி பேசி, நேரத்தை விரையமாக்க விருப்பம் இல்லை.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதில் எந்தத் தொய்வும் இல்லை. நிச்சயம் இரட்டை இலையை மீட்போம். எடப்பாடி பழனிசாமி, அனுபவத்தால் முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை பார்க்கும்போது, அவர் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதைக் காட்டுகிறது. தமிழக மக்கள் துரோகத்தை ஏற்க மாட்டார்கள். இந்த ஆட்சி எப்போது வேண்டும் என்றாலும் கலைந்துவிடும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் நாங்கள் அமோகமாக வெற்றிபெறுவோம்'' என்றார்.

Dailyhunt

No comments:
Post a Comment