போர்க்கொடி தூக்கிய 4 உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் தலைமை
நீதிபதி தீபக் மிஸரா பேச்சுவார்த்தை நடத்தினார்.உச்ச நீதிமன்றத்தின் நான்கு
மூத்த நீதிபதிகளான, ஜே.சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகுர், குரியன்
ஜோசப் ஆகியோர், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, சமீபத்தில் சில
கருத்துக்களை முன்வைத்தனர். மூத்த நீதிபதிகள் திடீர் போர்க்கொடி
துாக்கியது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட பார்
கவுன்சில் நடவடிக்கை எடுத்துவந்தது. 2 அல்லது 3 நாளில் பிரச்னை முடிவுக்கு
வரும் என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியிருந்தார்.இந்நிலையில்,
போர்க்கொடி தூக்கிய சலமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன் லோகூர், குரியன் ஜோசப்
ஆகியோரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்தரா தனது அறைக்கு வரவழைத்து சமரசம்
பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, நமக்குள்ள
பிரச்னையை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என தலைமை நீதிபதி கூறியதாக
தெரிகிறது.

No comments:
Post a Comment