உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் எழுந்துள்ள பிரச்னை
நீடிப்பதாகவும், 2 அல்லது 3 நாளில் சுமூகமாக தீர்வுக்கு வரும் என மத்திய
அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியுள்ளார். சமரச முயற்சிஉச்ச
நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான, ஜே.சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய்,
மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு
எதிராக, சமீபத்தில் சில கருத்துக்களை முன்வைத்தனர். மூத்த நீதிபதிகள்
திடீர் போர்க்கொடி துாக்கியது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய பார்
கவுன்சில் மற்றும் உச்சநீதிமன்ற பார்கவுன்சில் நிர்வாகிகள் தலைமை நீதிபதி
தீபக் மிஸ்ராவை சந்தித்து பேசினர். தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்ததாக
அறிக்கை வெளியிட்டனர்.எதிர்பார்ப்புஇந்நிலையில், அட்டர்னி ஜெனரல்
வேணுகோபால் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: நீதிபதிகள்
மத்தியில் எழுந்த பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்றே நான் கருதுகிறேன்.
இந்த பிரச்னை அடுத்த 2 அல்லது 3 நாளில் பிரச்னை முடிவுக்கு வரும் என
எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இடமில்லைஇந்நிலையில்
உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்து தலைமை
நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இந்த அமர்வில் போர்க்கொடி தூக்கிய
4 நீதிபதிகள் இடம்பெறவில்லை.
இந்த அமர்வில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏகே சிக்ரி, ஏஎம் கன்வில்கர், டிஓய் சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமர்வு நாளை(ஜன.,17) முதல், ஆதார், ஓரின சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது நீக்குவது குறித்து வழக்குகளை விசாரிக்கும்.

No comments:
Post a Comment