பயங்கரவாதிகள் கையில் அணு மற்றும் வேதியியல் ஆயுதங்கள்
சிக்கினால், அது மனித இனத்திற்கு பேரழிவு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என
ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில்
அவர் பேசியதாவது: சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் நவீன ஆயுதங்களை
பயன்படுத்துகின்றனர். பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உதவுபவர்களையும்
தடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எந்த நாடு உதவுகிறது என்பதையும்
கண்டுபிடிக்க வேண்டும். அணு மற்றும் வேதியியல் ஆயுதங்கள் பயங்கரவாதிகள்
சிக்கினால், அது மனித இனத்திற்கு பேரழிவாக முடியும். பயங்கரவாத அமைப்புகள்
பயன்படுத்தும் இணையதள சேவை மற்றும் சமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடு
விதிப்பதுடன் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
ஜனநாயக நாட்டில் இதனை சிலர் விரும்ப மாட்டார்கள். பாதுகாப்பான மற்றும்
அச்சுறுத்தல் இல்லாத சூழ்நிலை வேண்டுமா அல்லது தற்காலிக கட்டுப்பாடுகளை
அவ்வபோது ஏற்க வேண்டுமா என்பதை மனதில் வைத்து இந்த விவகாரத்தில் முடிவு
எடுக்க வேண்டும். இதன் மூலம் பயங்கரவாதிகளை கையாளலாம். இவ்வாறு அவர்
பேசினார்.

No comments:
Post a Comment