சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக
நீதிபதிகள் 4 பேர், வழக்கத்திற்கு மாறாக செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு
குற்றச்சாட்டு கூறினர். இதனையடுத்து நீதிபதிகளுக்குள் சமரசம் செய்வதற்காக 7
பேர் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்தது. இக்குழு, தலைமை
நீதிபதியையும், அதிருப்தி நீதிபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தியது. இதனையடுத்து நேற்று, அதிருப்தி நீதிபதிகள் 4 பேரும் தலைமை
நீதிபதியை சந்தித்து 15 நிமிடங்கள் பேசினர். இதனையடுத்து, நீதிபதிகளுக்கு
இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.நீதிபதிகள் இடையேயான
பிரச்னை தீர்க்கப்பட்டதற்கு அடையாளமாக இன்று, பொது விருந்து நிகழ்ச்சி
ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். அதிருப்தி நீதிபதிகளில் 3 பேர் மட்டும் இந்த விருந்து
நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். நீதிபதி செல்லமேஸ்வரன், நேற்று தலைமை
நீதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்றார். இருப்பினும் இன்று நடக்கும்
விருந்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செல்லமேஸ்வரன் இன்று விடுமுறையில் சென்றுள்ளார்.மூத்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி செல்லமேஸ்வரன் உள்ளடங்கிய பெஞ்ச் இன்று முக்கியமான 8 வழக்குகளை விசாரிக்கிறது. இதில் அரசியல் சாசன சட்டத்தின்படி ஆதார் அட்டை செல்லுமா? என கேட்டு தொடரப்பட்ட வழக்கும் ஒன்று.

No comments:
Post a Comment