Latest News

அலட்சியம், ஆக்கிரமிப்பு, மழை, வெள்ளம் = பிலால் நகர்


விடிந்தும் இருட்டு என்பது நமதூர் சொல் வழக்கு. ஆம், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வருடந்தோறும் கண்ணீரிலும் தண்ணீரிலும் தத்தளிக்கும் பிலால் நகருக்கு இன்னும் நிரந்தர விடிவே வரவில்லை.

உச்சி முதல் உள்ளுர் வரை ஆளுங்கட்சி ஆட்கள் அதிகார பீடத்தில் இருந்து கொண்டு 'இந்த பூனைக்கு மணிகட்டுவது யார்' என மக்களின் கண்ணீர்மேல் தண்ணீர் விட்டு விளையாடிக் கொண்டுள்ளனர்.

செடியனிலிருந்து வழிந்தோடும் உபரி நீரை அதன் பாரம்பரிய வழித்தடத்தின் மீது அமைந்துள்ள ஒரு சில ஆக்கிரமிப்புகளை அகற்றி செய்னாங்குளத்தில் கலந்தோட செய்தாலே பாதி நீர் வடிந்துவிடும், மீத நீரும் ஏரியின் வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்தாலே தெருவுக்குள் தேங்காமல் சென்றுவிடும்.

சில குடும்பத்தின் சுயநலத்திற்காக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?

மயிலே, மயிலே என்றால் இறகு போடாது அதை பிடுங்கித்தான் எடுக்கனும் என மக்கள் கொந்தளிக்குமுன் சம்பந்தபட்டவர்கள் தானே வழிவிட வேண்டும் இல்லையேல் அரசே முன்னிற்று உடன் முடித்துத் தர வேண்டும்.

செடியன் குளத்திலிருந்து வழியும் உபரி மழை, வெள்ள நீர்
செடியன் குளத்தின் வடிகால் வாய்க்கால்

பாதி வழியில் 
செடியன் குள வடிகால் மேல் ஆக்கிரமிப்புகளால் U turn அடித்து பிலால் நகருக்குள் வரும் தண்ணீர்
திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாய் பிலால் நகர்

2 comments:

  1. நல்லதொரு விழிப்புணர்வு !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி !

    ஏழை எளியோர்கள் வசிக்கும் பிலால் நகரின் அவல நிலையை எடுத்துச்சொன்னதற்கு

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.