அஸ்ஸலாமு அலைக்கும்….
இந்த தகவலின் கீழ் உள்ள இணைப்பில், “ஏர்போர்ட்ஸ் இண்டர்நேஷனல்” என்ற ஆங்கில இதழில் வெளியான ஒரு கட்டுரையைத் தங்களுடைய பார்வைக்கும் மற்றும் சமுதாய ஆர்வலர்களின் பார்வைக்கும் சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன்.
இது ஓர் ஆய்வுக் கட்டுரை; இது,திருச்சி விமான நிலையம் எவ்வாறு மத்திய தமிழ் நாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என்பதைப் புள்ளி விவரங்களுடன் துல்லியமாக விளக்குகிறது.இன்ஷா அல்லாஹ், இந்தக் கட்டுரையின் விவரங்கள் நம்முடைய சமுதாய ஆர்வலர்களின் மூலமாக வளைகுடாவில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை வழங்கும் எமிரேட் ஏர்லைன்ஸ்,ஏர் இந்தியா,ஜெட் ஏர்வேஸ் மற்றும் வளைகுடாவைச் சேர்ந்த ஏனைய விமான சேவை நிறுவனங்கள் ஆகியவற்றின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுமானால் அதன் பயனாக புதிய விமான சேவைகள் திருச்சிக்குக் கிடைக்கும் மகத்தான வாய்ப்புகள் ஏற்படும்.
இந்தக் கட்டுரையை எழுதிய இளவல் ஹ.உபைதுல்லாஹ், M.B.A (Air lines & Airports management) படித்தவர்;இப்பொழுது இந்திய விமானத்துறையின் வளர்ச்சி பற்றிய ஆய்வை (Phd) மேற்கொண்டுள்ளார். இவருடைய ஆய்வு மிகவும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது;மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக நடைமுறைப் படுத்தக்கூடிய வழி வகைகளைக் காட்டுவதாகவும் உள்ளது.அவ்வாறு நடைமுறைப் படுத்தப் பெறுமானால் மத்திய மற்றும் மேற்குத் தமிழ் நாட்டைச் சேர்ந்த வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களுக்கெல்லாம் பெரும் பயன் விளையும் என்பதில் ஐயமில்லை.
வளைகுடா நாடுகளில் உள்ள நம் சமுதாய அமைப்புகள் தக்க முயற்சிகளை மேற்கொள்ளுமானால் ஓர் ஆய்வாளருக்கும் மத்திய தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியையும் பெரும் பயனையும் அளித்த நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது உறுதி.
வஸ்ஸலாம்.
மிக்க அன்புடன்
தங்கள்
ஏம்பல் தஜம்முல் முகம்மது.
நன்றி : முதுகுளத்தூர்
தங்கள்
ஏம்பல் தஜம்முல் முகம்மது.
நன்றி : முதுகுளத்தூர்
ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!
ReplyDeleteஅன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் !
இதே போல் மற்ற இயக்கத்தினர் பாதிக்கப்பட்டபோது நீங்கள் வர மறுப்பதேன்?
மற்ற முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் இது போன்று போராடுவீர்களா?
இதைக் கேட்டால் நாங்கள் உங்களை அழைக்கவில்லை! நாங்கள் மக்களை அழைக்கிறோம் என்கிறீர்களே மக்களிலே இயக்க வாதிகள் அடங்க்குவார்களா இல்லையா?
இயக்கங்கள் வேண்டாம் அதில் உள்ள மக்கள் வேண்டும் என்றால் ஆடு பகை குட்டி உறவா?
அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கின்றீர்கள் ! முஸ்லிம்கள் என்றால் யார் ? அதன் வரைவிலக்கணம் என்ன? அதற்குள் மற்ற அமைப்பினர் அடங்குவார்களா இல்லையா?
மண்ணடி கூட்டத்தில் பேசிய பி.ஜே 'எதிரி அமைப்புகள் கூட கண்டனம் தெரிவித்தனர் ஏன் எனில் இது சமுதாயப் பிரச்னை' என்றாரே? சமுதாயப் பிரச்சனையில் மற்ற அமைப்புகளோடு சேர்ந்து போராடுவதில் என்ன இடர்ப்பாடு?
மற்ற அமைபினரோடு சேர்ந்து போராடுவது கொள்கையற்ற கூட்டு என்கிறீர்களே ? குரான் ஹதிஸ் அல்லாத மற்ற மக்களை அழைப்பது கொள்கையற்ற கூட்டு இல்லையா ?
சமுதாயத்திற்கு நன்மை பயக்குமானால் கொள்கையற்ற , கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகளோடு கூட்டணி சேரும் போது சமுதாய நன்மைக்காக முஸ்லிம் அமைப்பினருடன் இணைவதில் என்ன தவறு?
தடியடிக்கு சிறை நிரப்பும் போராட்டம் என்றால் பல்லாண்டு சிறையில் வாடும் மக்களுக்கு போராடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
மரணத்தோடு போராடும் அபுதாகிருக்காக ஒரு அறிக்கை விடுவதில் என்ன சிரமம் ?
உங்கள் மீது தடியடி நடத்தியது சமுதாயப் பிரச்னை என்றால் சமுதாயத்திற்காக சிறை சென்று பல்லாண்டுகளாக தங்களின் குடும்பத்தை, இளமையை, சுகத்தை ,சொந்தத்தை ,ஏன் உயிரையும் இழந்து கொண்டிருக்கிறார்களே ! அது இந்த சமுதாயத்தின் பிரச்னை இல்லையா?
இந்தக் கேள்விகள் சமுதாயம் உங்களை நோக்கி வைக்கும் கேள்விகள் பதில் சொல்வதை விட்டு விட்டு மீண்டும் வசை பாடினால், கேள்வியை விட்டு விட்டு கேள்வி கேட்டவன் மேல் பாய்ந்தால், உங்களின் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களுக்கு கூட ஐயம் எழுந்து விடும்.ஆகையால் நேர்மையுடன் பதில் சொல்லுங்கள்! கண்ணியத்துடன் பதில் சொல்வீர்கள் என எதிர் பார்க்கிறோம்.கோபப்பட்டால் உங்களிடம் பதில் இல்லை என அர்த்தம்.
சம்பந்தமே இல்லாமல் கண்டதை போஸ்ட் செய்பவர்கள், உங்களின் ஆக்கத்தை TNTJ தனகென்று ஒரு வெப்சைட் வைத்து இருக்கிறார்கள் அங்கே
ReplyDeleteசென்று போஸ்ட் செய்யுமாறு கேட்டுகொள்கிறோம் ..நிச்சயமாக அவர்கள் உங்களுக்கு பதில் தருவார்கள்...அதை விட்டுவிட்டு உங்கள் வாயிற்று எரிச்சலை கண்ட இடத்தில் கொட்டாதீர்கள்...
அன்பிற்கினிய TIYAWEST அட்மின்களே,
ReplyDeleteமேலே அதிரை நம்பன் கூறுவதுபோல் அதற்கென்று publish செய்யப்பட்ட postக்கு பதில் தராமல் கண்டதை போஸ்ட் செய்வதை கண்காணிக்கா விட்டால் அதிரை TIYA வெஸ்ட் ...TIYA வேஸ்ட் ஆஹா மாறிவிடும்...
அவர்ஹளுக்கு திராணி இருந்தால் நேரடியாக TNTJ விடம் மோதிபர்கட்டும்...