பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நம்மையை ஏவுவார்கள், தீமையைத் தடுப்பார்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள் அவர்களுக்கே அல்லஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அத்தவ்பா 9:71 )
அன்பிற்கினிய புலம்பெயர்ந்து சவுதி,
கத்தார்,குவைத், மலேசியா, அமெரிக்க, மற்றும் ஐரோப்பா நாடுகளி வாழ்கிற அதிரை மேலத்தெரு சொந்தங்களுக்கு அமீரகம் வாழ் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்
( TIYA ) நிர்வாகிள் எழுதிக் கொண்டது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹீ.
இம்மடல் தங்கள் அனைவரையும் பூரண நலன்களுடனும்.
தூய இஸ்லாமிய உணர்வுகளுடனும் இருக்கும் நிலையில் சந்திக்க பிரார்த்திக்கிறோம்..
வல்ல நாயன் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரகத்தில் கடந்த
7 வருடங்களாக நல்ல முறையில் சிறப்பாக செயலாற்றி வருகிறோம்.
இதை தாங்களும் அறிவீர்கள்.
இது அதிரை மற்றும் அமீரகம் ஆகிய பகுதிகளில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டுயுள்ளது இதை மேலும் பிற நாடுகளில் வாழும் நமது முஹல்லாவாசிகளின் பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும்மென்ற நல் என்னத்தில் இதை உங்களின் பார்வைக்கு தருகிறோம்.
இதில் உங்களின் மேலான கருத்துகளையும் ஆதரவையும் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
தாயகத்தில் நமது முஹல்லாவில் சம்பவிக்கும் மரணங்கள் குறித்து செய்திகளை SMS மூலம் அமீரகத்தில் உள்ள நமது முஹல்லாவாசிகளுக்கு சுமார் 300க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு உடனுக்கு உடன் தகவல் தெரிவித்து வருகிறோம் அதோடு மட்டுமல்லாமல் நமது இனையதளத்திலும் adiraitiyawest.blogspot.com இதிலும் முழுவிபர்ங்களுடன் பதிவு செய்து வருகிறோம். மேலும் பிற நாடுகளில் வாழும் சவுதி, குவைத், கத்தார், மலேசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் வாழும் நமது முஹல்லாவாசிகளுக்கு GOOGLE GROUP மூலம் கொண்டு செல்ல வேண்டுமென்று முடிவு செய்துள்ளோம். பிற நாடுகளில் வாழும் நமது முஹல்லாவாசிகள் தாங்கள் ஈமெயில் ஐடியை உடன் எங்களுக்கு அனுப்பிதருமாறு அன்புடன் கேட்டு கொள்க்றோம்.
தொடர்புக்கு அமீரக தலைவர் N. முகமது மாலிக் 0097150-7914780 – ஈமெயில் : kmmalik2009@gmail.com
அன்புடன்
தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம்
அமீரகம் - துபை
No comments:
Post a Comment