இன்று அதிகாலை அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் குழுவினர் அதிரை காவல் துறையுடன் இணைந்து சிறப்பாக செய்து இருந்தனர். பல தரப்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்ட இந்த போட்டியின் எல்லை அதிரை பேருந்து நிலையத்திலிருந்து கொள்ளுக்காடு வரை சென்றுவிட்டு திரும்பவேண்டும் என்பதால் போட்டியில் பங்கு பெற்ற வீரர்கள் தங்கள் கால்களை விரைவாக கொள்ளுக்காடை நோக்கி செலுத்தினர். அப்போது அந்த வழியே உள்ள கிராமங்களில் ஏன் இந்த போட்டி? ஏதற்க்காக இவர்கள் ஓடுகின்றனர்? என யோசித்த அவர்களின் செவிகளை அடைந்தது இது உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி என்னும் ஆட்டோ விளம்பரம். முன்னதாக காதர் முஹைதீன் கல்லூரியிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பிரசார ஊர்வளம் முக்கிய வீதிகளை கடந்து அதிரை பேருந்து நிலையத்தை வந்து அடைந்தது. இவ்வாரான போட்டிகளை நமதூரில் மூன்றாவதாக நடத்தி சாதணை படைத்த அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் குழுவினர்க்கு நமது உடகத்தின் சார்பில் பாராட்டுகளை தெறிவித்து கொள்கிறோம்.
நன்றி : adiraithunder
No comments:
Post a Comment