
ரூபாய் நோட்டு வாபஸ், கறுப்பு பண ஒழிப்பு மூலம் பா.ஜ., அரசு நாட்டை
காப்பாற்றியுள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
தெரிவித்துள்ளார்.துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை
மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண்
ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டார்.விழாவில் அவர் பேசியதாவது: மோடி
ஆட்சிக்கு முன்பிருந்த அரசு எதற்கும் உதவாத அரசாகவே இருந்தது. ஒரு
குடும்பமே நாட்டை கைபற்றி ஆட்சி செய்து வந்தது. நாட்டில் எதிர்புணர்வை
தூண்டுவது சில சூழ்ச்சி சக்திகள் தான். நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என
குரல் கொடுப்பவர்களுக்கு காங்., கட்சி ஆதரவளிக்கிறது. கடினமான மனநிலையில்..
ரூபாய் நோட்டு வாபஸ் ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கை.
கடினமான மனநிலையில்தான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை
அதிகரித்துள்ளது. பிரதமரின் நடவடிக்கையால் நாட்டின் வரி வருவாய்
அதிகரித்துள்ளது. ஆனைத்து மாநிலங்களிலும் பார்லி., தேர்தலுடன் சட்டமன்ற
தேர்தலை சேர்த்து நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment