
ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்
என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.துக்ளக் பத்திரிக்கையின்
48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டார். அரசியல்
மாற்றம்: விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: அ.தி.மு.க.,
மற்றும் தி.மு.க.,வால் இளைஞர்களை ஈர்க்க முடியாது என்பதால் தமிழகத்தில்
அரசியல் மாற்றம் வரும். தமிழக அரசியலில் ரஜினிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
கழகங்களுடன் கூட்டணி அமைக்காமல் இருக்க ரஜினி வகுத்த செயல் வியூகம் தான்
ஆன்மீக அரசியல்.ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை
மாற்ற முடியும்.
கழங்களின் தொடர்ச்சியாகவே நடிகர் கமல் அரசிலுக்கு வருகிறார் எனத்
தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment