
தினகரன் புதுக்கட்சி துவங்க உள்ளார்,''என தங்கதமிழ் செல்வன்
பேசினார்.தேனியில் நடந்த அ.தி.மு.க., அம்மா அணி ஆதரவாளர்கள் ஆலோசனை
கூட்டத்தில் அவர் பேசியதாவது: 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதிநீக்கம் தொடர்பான
வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அனைவரும் தினகரனுடன்
சட்டசபைக்குள் செல்வோம். தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் விரைவில்
வரும்.பஸ் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு
கேட்டு வரும் அமைச்சர்களை பொதுமக்கள் விரட்டியடிப்பர்.புது கட்சி துவக்க
தினகரன் தயாராகி வருகிறார். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8
மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.தேனியில்
விண்ணப்பத்தை பெற்று ஜெ., பிறந்தநாள் அன்று புதிய கிளை நிர்வாகிகள்
பெயர்கள் வெளியிடப்படும்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம்.
அதுவரைக்கும் தான் இந்த திட்டம், என்றார்.
No comments:
Post a Comment