
பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட மாணவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பத்தூர்
- கொரட்டூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பட்டரைவாக்கம் ரயில்
நிலையத்தில், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 10 பேர் கொண்ட
மாணவர்கள் தாக்கியதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
பட்டரைவாக்கம்
ரயில் நிலையத்தில், ரயில் நின்றதும், அதிலிருந்து பயணிகள் இறங்கியநிலையில்,
ஆயுதங்களுடன் ஓடிய 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றொரு மாணவர் கும்பலை
சரமாரியாகத் தாக்கினர்.
மாணவர்கள் காயம்
காவல்துறையிடம் ஒப்படைப்பு .
காவல்துறையிடம் ஒப்படைப்பு .
இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களை பயணிகள் மீட்டு அம்பத்தூர் ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ரூட் தலை யார்?
ரூட்
தலை யார் என்ற போட்டியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியைச்
சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஆயுதங்களுடன் ஓடிய மாணவர்கள்
ரயில்வே
நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் மாணவர்கள் கத்தி உள்ளிட்ட
ஆயுதங்களுடன் ஓடும் காட்சிகள் பதிவானது. இதனை வைத்து மாணவர்களை போலீசார்
தேடிவருகின்றனர்.
2 பேர் கைது
இந்நிலையில்
மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற
மாணவர்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
source: oneindia.com
No comments:
Post a Comment