தாழ்த்தப்பட்ட
மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உதவித்தொகை குறைக்கப்பட்டதை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவில், மத்திய
அரசின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தனியார்
சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என தமிழக அரசு கடந்த
2012 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.இத் திட்டத்தின் மூலம் கடந்த 5
ஆண்டுகளில் 43 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அரசாணையில் திருத்தம் செய்து அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்படும் என
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின்
கல்வித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1797 கோடி
வழங்கப்படாததால் இந்த உதவித்தொகைக் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டணம் செலுத்தாதல் 4 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு அனுமதிச்சீட்டு
வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு வழங்கவேண்டிய இந்த தொகையை உடனடியாக தமிழக அரசுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
எனவே மத்திய அரசு வழங்கவேண்டிய இந்த தொகையை உடனடியாக தமிழக அரசுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த
மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ்
அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்
சத்தியசந்திரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு
தொடர்பாக வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க
உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment