
நடிப்பதற்கு இந்த நாட்டு பிரதமரிடம் டிப்ஸ் கேளுங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாக ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தீவிர எதிர்ப்பாளர் ஆவார்.
இந்நிலையில் ஜிக்னேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் உடன்
சேர்ந்து எடுத்துள்ள ஒரு படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டுள்ளார். அதில் பிரகாஷ் ராஜை சந்தித்த போது அவரிடம் நடிப்பு
குறித்து ஒருசில டிப்ஸ்களை கொடுக்குமாறு கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ் தன்னிடம் நடிப்புக் குறித்து டிப்ஸ்
கேட்பதற்கு பதில் நாட்டின் பிரதமரிடம் கேள் என தெரிவித்ததாகவும் ஜிக்னேஷ்
தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்த கூட்டத்தில்
பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி தன்னை விட சிறந்த நடிகர் என
விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment