
முத்தலாக் சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையை குறைக்க வலியுறுத்தி,
வழக்கு தொடர்ந்த மகளிர் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஒரே
நேரத்தில் மூன்று முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு
எதிராக, 'முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டம்' என்ற பெயரில் மத்திய
அரசு புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. அந்த மசோதாவில், 'மூன்று முறை
தொடர்ந்து தலாக் கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு, மூன்று
ஆண்டு சிறை தண்டனை. இதை மீறி, முத்தலாக் கூறும் ஆண்கள் கைது
செய்யப்பட்டால், ஜாமின் வழங்கப்பட மாட்டாது. விவாகரத்து பெறும்
பெண்களுக்கு, முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்கள் குழந்தைகளின்
பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பேற்கவும் வசதி செய்யப்படும்' என
கூறப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா
நிறைவேற்றப்பட்டது. ஆனால், பெரும்பான்மை இல்லாததால் மாநிலங்களையில்
நிறைவேறாமல் மசோதா நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தண்டனையை
குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்த பாரதிய முஸ்லீம் மகிளா அண்டோலன் மகளிர் அமைப்பு எழுதியுள்ளது.
அதில் தண்டனை அளவை மூன்று ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும்
என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment