
386 அல்லது 3,086 பயங்கரவாதிகள்
ஊடுருவ தயாராக இருந்தாலும், ஒருவரை கூட ஊடுருவ விடாமல் தடுக்க ராணுவம்
தயாராக உள்ளது என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக
தெரியுங்களா?
பாகிஸ்தானின் உளவு அமைப்பான
ஐ.எஸ்.ஐ.,யின் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், காஷ்மீருக்குள் ஊடுருவ
எல்லையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்குள் ஊடுருவ,
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.,யிடம் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் 386
பேர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாம்களில் காத்திருக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு
காஷ்மீரில் உள்ள ரின் கெல், சர்தி, துத்நியல், அத்முகம், ஜூரா, லிபா,
பச்சிபன், பார்வர்டு ககுடா, கோட்லி, குயிரட்டா, மந்தர், நில்கயில்,
சமன்கோட் மற்றும் ஜன்கோட் பகுதிகளில் செயல்படும் முகாம்களில் அவர்களுக்கு
பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம், துணை ராணுவம்,
காஷ்மீர் போலீசாரை கொல்ல லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ., உத்தரவிட்டுள்ளது.
இந்த
பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் தலா 20 இந்திய வீரர்களை கொல்ல
வேண்டும் என ஐ.எஸ்.ஐ., அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதற்குதான் நம்
ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும்
பாகிஸ்தானின் திட்டம் முறியடிக்கப்படும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு
நமது பாதுகாப்பு வீரர்கள் உரிய பதிலடி அளித்து வருகின்றனர். 386 அல்லது
3,086 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக இருந்தாலும், ஒருவரை கூட ஊடுருவ விடாமல்
தடுக்க ராணுவம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment