
தமிழிசை சவுந்தர ராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.
தமிழகத்தில்
பாஜகவை காலூன்ற வைப்பதே தனது குறிக்கோளாக கொண்டுள்ளார். இந்நிலையில்
2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பாரதிய ஜனதா மாநில
தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இன்று
வழங்கியுள்ளது.
சென்னையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் விழா இன்று
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 2017-ம் ஆண்டு சிறப்பாக அரசியல் மற்றும்
பொதுநலச் சேவைகள் பணியாற்றிதாக, தமிழக மாநில பாரதிய ஜனதா தலைவர்
சவுந்தரராஜானுக்கு சிறந்த பெண் அரசியல்வாதி என்ற விருதை சர்வதேச மனித
உரிமைகள் ஆணையம் வழங்கியது.
விருதுபெற்ற தமிழிசை சவுந்தரராஜானுக்கு கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment