டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்பாகமேல்முறையீடு
செய்ய மத்திய சட்டஅமைச்சகம் அனுமதியளித்ததை தொடர்ந்து விரைவில் அதற்கான
பணியில் சிபிஐ அதிகாரிகள்தீ விரமாக ஈடுபட்டு வருகின்றனர்
காங்கிரஸ்தலைமையிலான
முந்தைய ஐக்கிய முற்போக்குகூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத்
துறைஅமைச்சராக, திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாஇருந்தபோது, 2ஜி அலைக்கற்றை
ஒதுக்கீட்டில்முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில்
ஆ.ராசா, திமுகஎம்.பி. கனிமொழி, தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர்
சித்தார்த் பெஹுரா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த
வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்புநீதிமன்றம், ஆ.ராசா,
கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சிபிஐ மற்றும்
அமலாக்கத்துறை ஏற்கெனவே தெரிவித்து இருந்தன. இதைத் தொடர்ந்து வழக்கு
தொடர்பாக சட்ட நிபுணர்களுடன், பல்வேறுகட்ட ஆலோசனையில் சிபிஐ அதிகாரிகள்
மேற்கொண்டனர்.
2ஜி நீதிமன்ற தீர்ப்பின்பல்வேறு அம்சங்கள் தொடர்பாக
விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய சட்டஅமைச்சகம்
மேல்முறையீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளில்
சிபிஐ அதிகாரிகள் இறங்கியுள்ளனர். சென்ற முறை தீர்ப்பில் சாட்சியங்கள்
முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சிபிஐக்கு நீதிபதி கண்டனம்
தெரிவித்ததால், இந்த முறை தவறு ஏதும் நடக்காதவகையில் பல கட்ட ஆலோசனையில்
சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
source: oneindia.com

No comments:
Post a Comment