உத்தரப்பிரதேச மருத்துவமனையில் 32 கண்புரை நோயாளிகளுக்கு டார்ச் லைட்
மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட செய்தி குறித்து விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திகளின்படி, உபியின்
நவாப்கஞ்ச் பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை)
அறுவைசிகிச்சை நடந்துள்ளது. மின்சாரமோ அதற்கு பதிலாக உரிய முன்னேற்பாடுகளோ
இல்லாததால் 32 நோயாளிகளுக்கு டார்ச் லைட்டைக் கொண்டு அறுவைசிகிச்சை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கூறிய தலைமை மருத்துவ அதிகாரி ராஜேந்திர பிரசாத்,
''மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உண்மையில் தவறு
நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும்'' என்றார்.
இதற்கிடையே, நோயாளிகள் சிலரின் உறவினர்கள்
மருத்துவமனை மீது புகார் தெரிவித்துள்ளனர். கடுமையாக குளிர் நிலவும்
சூழ்நிலையிலும் நோயாளிகள் தரையில் படுக்குமாறு நிர்பந்திக்கப்பட்டதாகவும்,
அவர்களுக்கு உரிய படுக்கை வசதிகள் அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment