ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மகாபிரபு தான்
வெற்றி பெறுவார் என்று கூறிய மதுரை கலக்ட்ரேட் சித்தர் சொன்ன மகாபிரபு
டிடிவி தினகரன் தான் என்று சாமியாரை பிரபலமாக்கி வருகின்றனராம் அவரை சுற்றி
உள்ள ஒரு கூட்டம். இதனால் சாமியார் பிரபலமடைந்து வருகிறார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே பிளாட்பாரத்தில் ஜீன்ஸ் அணிந்து ஜடை வளர்த்து குறி சொன்ன சித்தர் என்று கூறிக்கொள்ளும் நபர் பெயர் சிதம்பரம், ஆனால் கலக்ட்ரேட் சித்தர் என்றால் தான் பிரபலம். இவர் கடந்த வாரம் ஊடகங்களில் பிரபலமானார். அவர் வாயில் வந்ததை தன் வாழ்க்கைக்கு சொல்லும் குறியாக நினைத்து அவரை மொய்த்த கூட்டத்தால் அந்த பகுதியிலேயே அவர் பிரபலமாகி விட்டார்.

போதாத குறைக்கு ஊடகங்கள் பார்வையில் அவர் விழ ஆர்.கே.நகரில் யார்
வெல்லுவார் என்ற அதி முக்கியமான கேள்விக்கு அவர் வாயில் வந்ததை வழக்கமாக
சொல்வது போல் “அங்கு போட்டியிடும் அத்தனை பேரின் ஜாதங்களையும்
பார்த்துத்தான் சொல்ல முடியும். என் கணிப்புப்படி, பிரபு என்ற பெயர்
கொண்டவர்தான் ஜெயிக்க வாய்ப்புள்ளது, அவர் ஒரு மகாபிரபு என்று கூறி வைக்க
அது செய்தியானது.
தற்போது அனைவரையும் தோற்கடித்து ஆர்.கே.நகரில்
டிடிவி தினகரன் வெல்ல பார்த்தீர்களா எங்கள் குருஜி சொன்ன மகாபிரபு தான்
வென்றார், அவர் தினகரனைத்தான் சொன்னார் என்று கூறி பொதுமக்களிடம் இப்போதே
பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்களாம் அவரை சுற்றி உள்ள கூட்டத்தினர்.
சொல்ல முடியாது அடுத்த பொதுத்தேர்தலில் பெரிய அளவில் ஆசிரமம் கட்டினாலும் சொல்வதற்கில்லை என்கிறார்கள்.

No comments:
Post a Comment