Latest News

குஜராத் தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடியின் பிம்பம் தகர்ந்துள்ளது: ராகுல் காந்தி


குஜராத் தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடியின் பிம்பம் தகர்ந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

இந்நிலையில், குஜராத் தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்) கூறியதாவது:

''குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியல் தோல்வியடைந்துள்ளது. அங்கு ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடியின் பிம்பத்தை குஜராத் மக்கள் நிராகரித்து விட்டனர். அவரது பிரச்சாரமும் தோல்வியடைந்துள்ளது. 

குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் மீதான நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் மனதில் கோபமே நிறைந்து இருக்கிறது. கோபத்தால் சாதிக்க முடியாது. அன்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமருக்கு உணர்த்தியுள்ளது'' எனக் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.