ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் யார்
ஈடுபட்டாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளவரசியின்
மகனும், ஜெயாடிவி தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவேக் ஜெயராமன் இன்று வெளியிட்ட
அறிக்கையில், ''தமிழகத்தின் முகமாகவும், நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல்
ஆளுமையாகவும் விளங்கியவர் ஜெயலலிதா. அவரது தனிப்பட்டை வாழ்க்கை குறித்து
சிலர் மனசாட்சியற்ற கருத்துகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அவர்
புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவர் மகள் என்று சிலர் அவதூறுகளை
பரப்பிவருவது கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதா மறைந்தபோது வெற்று பரபரப்புகளுக்காக சிலர் இப்படிப்பட்ட
அவதூறுகளைப் பரப்பியபோது காலப்போக்கில் இவையெல்லாம் காணாமல் போகும் என்று
எண்ணி பொறுமையாக இருந்தோம். ஆனால், ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆன பிறகும்
எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் சிலர் தங்கள் விருப்பத்திற்கு கதை,
கற்பனைகளைக் கிளப்பிவிட்டு ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் கற்பிப்பது
கொஞ்சமும் சகிக்க முடியாத மனசாட்சியற்ற செயல்.
வளர்ப்பு மகனாக
சுதாகரனை தத்தெடுத்த போதும் மிக வெளிப்படையாக மக்களிடம் அறிவித்தார்.
அவெருக்கென யார் இருந்தாலும் அவர் மறைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவரின்
மரியாதையை குறைக்கும் விதமான எந்த செயலையும் யார் செய்தாலும் ஏற்க
முடியாது. இத்தகைய அவதூறுகளை அதிமுக தொண்டர்கள் ஒரு போதும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதா புகழுக்கு களங்கம்
விளைவிக்கும் செயல்களில் இனி யார் ஈடுபட்டாலும் சட்டரீதியான நடவடிக்கை
எடுக்கப்படும்'' என்று விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment