இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய
தேசிய காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி
பொறுப்பேற்றுள்ளார். காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்கும் நேரு குடும்பத்தைச்
சேர்ந்த 6-வது நபர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் உடல்நலம்
பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும்
ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள்
வலியுறுத்தினர்.
தலைவர்
பதவிக்கு ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி (டிச.4) வேட்புமனு தாக்கல்
செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் தலைவர் பதவிக்கு ராகுலை
அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த டிச.11-ம் தேதி
அவர் போட்டியின்றி ஏகமனதாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில்
அவர் முறைப்படி காங்கிரஸ் தலைவராக இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்றுக்
கொண்டார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இதற்கான விழா
நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்
மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மூத்த தலைவர்கள்
முன்னிலையில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:
Post a Comment