Latest News

தனிப்பட்ட விமர்சனங்களே ராகுலை துணிச்சலானவர் ஆக்கியுள்ளது; காங்கிரஸை நிச்சயம் அவர் சிறப்பாக வழிநடத்துவார்: சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவரானவுடன் தனது அன்னையை அன்பு முத்தமிடும் ராகுல் 
தனிப்பட்ட விமர்சனங்களே ராகுல் காந்தியை துணிச்சலான மனிதராக மாற்றியுள்ளது. அவர் இனி கட்சியை தைரியத்துடன் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இதற்கான விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ராகுல் காந்தியின் அன்னையுமான சோனியா காந்தி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"என்னை காங்கிரஸ் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த நேரத்தை எண்ணிப் பார்க்கிறேன். இவ்வளவு பெரிய அமைப்பை எவ்வாறு வழிநடத்தப் போகிறோம் என பயந்தேன், கவலை அடைந்தேன். ஆனால் இப்போது வியக்கிறேன்.

புரட்சிகரமான குடும்பத்துடன் எனது திருமணம் நடந்தது. இந்திரா காந்தி நாட்டிற்காக தன்னையே அர்பணித்தார். அவர் படுகாலை செய்யப்பட்டபோது, எனது தாய் உயிரிழந்ததாக உணர்ந்தேன். அந்த சமயத்தில் எனது கணவர் மற்றும் குழந்தைகள் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றே விரும்பினேன். நாட்டிற்கு தலைமை ஏற்கும் பொறுப்பு என் கணவர் ராஜீவ் காந்திக்கு உருவானது. பின், என் கணவர் கொல்லப்பட்டார். அப்போது எனது உறுதியை இழந்தேன். பின்னர் நிதானித்து என்னை சரி செய்து கொண்டேன்.

அந்த சமயத்தில் காங்கிரஸ் பலமிழந்து இருப்பதை கண்டேன். பொறுப்ப்பை ஏற்றுக் கொண்டேன். அதை நான் செய்யவில்லை என்றால் இந்திரா காந்தியும், ராகுல் காந்தியும் என்னை தவறாக எண்ணக்கூடும் என்பதால் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். நான் பதவியேற்றபோது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை, மூன்று மாநிலங்களிலும் மட்டும்தான் ஆட்சியில் இருந்தது. அதன் பின் நாம் சாதித்து எல்லாம், ஒரு தனிநபரின் பணியல்ல. உங்கள் அனைவரின் ஒட்டுமொத்த பணிகளால் மிகச்சிறப்பான வெற்றியை ஈட்டினோம். மத்தியிலும், 24 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
பிரதமர் மன்மோகன் சிங் மிகச்சிறப்பாக பணியாற்றினார். நமது அரசு, அனைத்து தரப்பு மக்களுக்காக பணியாற்றியது. 2014ம் ஆண்டில் இருந்து நாம் எதிர்கட்சியாக உள்ளோம். பெரும் சவால்களை சந்தித்து வருகிறோம். நாம் பயப்படவில்லை, வீழ்ந்து விடவில்லை. ஆட்சி அதிகாரம் நமது இலக்கு அல்ல, நாடு தான் நமது இலக்கு.

தற்போது, சுதந்திரமான பேச்சுரிமை மீது தாக்குதல் நடக்கிறது. அடிப்படை பண்புகள் தகர்க்கப்படுகின்றன. பய உணர்வு பரவுகிறது. சாதாரண மக்களயும் நாம் பிரதிநிதித்துவ படுத்துவதை காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு. அவர்களுக்கு நாம் புதிய சக்தியை கொடுக்க முடியும் என நான் நம்புகிறேன்.

 காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தி சிறுவயதில் வன்முறையை பார்த்து பயந்தார். ஆனால் அரசியலில் இணைந்தபிறகு, தனிப்பட்ட விமர்சனங்களை தைரியத்துடன் எதிர்கொள்கிறார். அது, அவரை துணிச்சலான மனிதராக மாற்றியுள்ளது. அவர் தைரியத்துடன் கட்சியை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என சோனியா காந்தி பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.