டிடிவி. தினகரனைப் போல ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும்
செய்ய முடியாது என முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது: அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வேண்டுமென்றே ஒரு சிலர் இந்த ஆட்சியை திட்டமிட்டு குறை கூறிக்
கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியாத
சூழலில், வீண் பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.
அமைச்சர்
சம்பத் மீது எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டுவதாக கூறப்படும் எந்த புகாரும்
எதுவும் என்னிடம் வரவில்லை. தேர்தலே வராதபோது அதற்குள் கூட்டணி வருமா,
வராதா என்ற கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது. தேர்தல்
வரும்போதுதான் கூட்டணி பற்றி சிந்திக்க முடியும். டிடிவி. தினகரனைப் போல
ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. 18
எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடந்து
கொண்டிருக்கிறது. கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டுமே சிலர்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜனநாயக நாட்டில் எல்லோரும் அரசியலுக்கு
வரலாம். அவர்களது தனிப்பட்ட விருப்பம். தான் தவறாக பொருள்படக்கூடிய கருத்தை
கூறவில்லை என ஆடிட்டர் குருமூர்த்தி மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே அதுகுறித்து கருத்து கூற ஏதுமில்லை.
பொதுமக்களுக்கான பொங்கல்
பரிசை அறிவித்துள்ளோம். சர்க்கரை இருப்பு இருப்பதால் விரைவாக கொடுக்க
முடிகிறது. வெல்லத்தை கொடுக்க வேண்டும் என்றால் தனியே வாங்கித்தான் கொடுக்க
வேண்டும். அதனால் காலதாமதம் ஏற்படும். கோவையைப் போலவே உதகையிலும் எம்ஜிஆர்
நூற்றாண்டுவிழா ஏற்பாடுகளின் போது ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுவது
குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
கோவை தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மொடக்குறிச்சி எம்எல்ஏ
சிவசுப்பிரமணியத்தை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு முதல்வர் பழனிசாமி
மேட்டுப்பாளையம் சென்றார்.
No comments:
Post a Comment