10 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க ஜனவரி 6-ம்
தேதி சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் குற்றவியல்
வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக
நிலுவையில் உள்ளதால் வழக்காடிகளும், எதிர் தரப்பினரும்
பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவனத்துக்கு
கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து வழக்குகளைப் பட்டியலிட்டு விசாரிக்க ஜன.6 அன்று சிறப்பு அமர்வை அமர்த்த அவர் உத்தரவிட்டார்.
இது
குறித்து நீதித்துறை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
''பத்தாண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை குறைக்கும்
நோக்கில், ஜனவரி 6-ம் தேதி சிறப்பு அமர்வுகளை அமைக்க தலைமை நீதிபதி இந்திரா
பானர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் வழக்குகள்
குறித்த பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும். பத்தாண்டு நிலுவை வழக்குகள்
குறித்து வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் தெரிவிக்கலாம். நிலுவை வழக்குகளை
முடிப்பதற்கு வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் போதிய ஒத்துழைப்பை தர
வேண்டும்'' என்று குமரப்பன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment