பெங்களூருவில் உள்ள ஆதார் தகவல் சேகரிப்பு மையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த
2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை திட்டத்தின் தகவல்
சேகரிப்பு மையம் பெங்களூருவில் உள்ள கோடிஹள்ளியில் உள்ளது. குடிமக்களிடம்
இருந்து பெறப்படும் கைரேகை, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இங்கு
பாதுகாக்கப்படுகின்றன. இதை தீவிரவாதிகள், சமூக விரோதிகள் உள்ளிட்டோர்
திருடவோ அல்லது அழிக்கவோ முயற்சிக்கலாம் என அச்சம் நிலவுகிறது.
எனவே, பெங்களூரு ஆதார் அலுவலகத்துக்கு மத்திய அரசு பலத்த பாதுகாப்பு
ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் மத்திய தொழில்
பாதுகாப்பு படையை சேர்ந்த 80 பேர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில்
அதிகாரப்பூர்வமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய
தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த கமாண்டோ ஹேமேந்திர சிங் கூறும்போது,
“குடிமக்களின் மிக முக்கிய தகவல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. எனவே, இது
நேரடியாக சிஐஎஸ்எப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஆதார் தகவல்கள் வெளியே கசிவது முற்றிலும் தடுக்கப்படும்” என்றார்.

No comments:
Post a Comment