ஸ்டாலினும் தினகரனும் கூட்டுச் சதி செய்து அதிமுகவை தோற்கடித்தனர்.
பில்லாவும், ரங்காவும் நாட்டை ஆளக்கூடாது என்று ஸ்டாலினையும், தினகரனையும்
இணைத்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
இன்று காலை, சென்னை பட்டினப்பக்கத்தில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:
''திமுக செயல்தலைவராக இருந்து சந்தித்த முதல் தேர்தல். தினகரன் -
ஸ்டாலின் இருவரும் கூட்டுசேர்ந்து செய்த சதியால் அதிமுக
தோற்கடிக்கப்பட்டது. பில்லாவும் ரங்காவும் இந்த நாட்டை ஆளக்கூடாது.
தினகரனும் ஸ்டாலினும் கை கோத்துள்ளனர். இருவரும் எவ்வளவு தொடர்பில்
இருக்கிறார்கள் என்பது இந்த நாடே அறிந்த உண்மை. ஆளுநர் மாளிகைக்கு
சேர்ந்தே போகிறார்கள். 2 ஜி வழக்கில் ராசாவுக்கும், கனிமொழிக்கும் தினகரன்
வாழ்த்து சொல்கிறார்.
ஜெயலலிதா இருந்தவரை 2ஜி வழக்கில் எந்த அளவுக்கு
எதிர்ப்பு காட்டி அதை முன்னின்று கொண்டு சென்றார், ஆனால் அவருக்கு துரோகம்
இழைக்கும் வகையில் இவர் வாழ்த்து சொல்கிறார். இதிலிருந்தே தெரிகிறது
இவர்கள் கூட்டு என்பது தெளிவாகிறது.
மு.க.ஸ்டாலின் தலைமை பற்றி
அவரது உடன் பிறந்த சகோதரர் அழகிரியே சான்றிதழ் கொடுக்கிறார். மு.க.ஸ்டாலின்
இருக்கும் வரை திமுக வெல்லாது என்று சொல்கிறார். இதை விட வேறு என்ன
வேண்டும்.''
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
No comments:
Post a Comment