தன்னை பிடிக்கும் என கூறிய 107 வயது மூதாட்டிக்கு காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைச்
சேர்ந்த திபாலி சிகந்த் என்பவர் நேற்று முன்தினம் தனது ட்விட்டர்
பக்கத்தில், “இன்று எனது பாட்டிக்கு 107-வது பிறந்த நாள். இந்த இனிய நாளில்
அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என ஆசையாக
கூறினார். ‘ஏன் திடீரென இப்படியொரு ஆசை?’ என கேட்டேன். அதற்கு பாட்டி,
‘ராகுல் காந்தி மிகவும் அழகாக இருக்கிறார். அவரைப் பிடிக்கும் என
புன்னகையோடு சொன்னார்’ என பதிவிட்டிருந்தார். மேலும் தனது பாட்டி
பிறந்தநாள் கேக் வெட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இதனை அறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“அன்புள்ள திபாலி, எனது சார்பாக உங்களது அழகான பாட்டிக்கு பிறந்த நாள்
மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவியுங்கள். என் சார்பாக அவரை
அரவணைத்து அன்பை அளியுங்கள்” என வாழ்த்து தெரிவித்தார். மேலும் கர்நாடக
காங்கிரஸார் மூலம் திபாலியின் தொலைபேசி எண்ணை கண்டறிந்து, அந்த
மூதாட்டிக்கு தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனால் சமூக வலைத்தளங்களில் ராகுலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
No comments:
Post a Comment