வில்லிவாக்கம் டாஸ்மாக் பாரில் ‘என்னடா கொட்டாங்குச்சி’ என்று ஜாலியாக
பட்டப்பெயரைச் சொல்லி அழைத்த நபரை ஆத்திரத்தில் குத்திக்கொன்ற இளைஞரும்
அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வில்லிவாக்கம் பாரதி
நகரைச்சேர்ந்தவர் கணேஷ்(29). நேற்று மாலை கிறிஸ்துமஸ் தின விடுமுறையை ஒட்டி
நண்பர்களுடன் மதுவருந்த தாளான்கிணறு என்னும் இடத்தில் உள்ள டாஸ்மாக்
பாருக்கு சென்றுள்ளார். மதுவருந்தி விட்டு பாரை விட்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது மது அருந்துவதற்காக வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோவில்
தெருவில் வசிக்கும் ஓம்பிரசாத்(27), ஐசிஎப் மேற்கு காலனியில் வசிக்கும்
அவரது நண்பர் தர்ஷன்(23) டாஸ்மாக் பார் உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது
ஓம்பிரசாத்தை பார்த்த கணேஷ் “என்னடா கொட்டாங்குச்சி எப்படி இருக்கிறாய்”
என்று கேலியாக அவரது பட்டப்பெயரை வைத்து அழைத்துள்ளார். தனது பட்டப்பெயரை
பலர் முன்னால் கேலியாக சொல்லி அழைத்ததும் ஆத்திரமடைந்த ஓம்பிரசாந்த்
யாரைப்பார்த்து கொட்டாங்குச்சி என்றாய் என்று கணேஷை தாக்கி உள்ளார்.
இதனால்
ஆத்திரமடைந்த கணேஷ் திருப்பித்தாக்க இதைப்பார்த்து கணேஷ் உடன் வந்த தர்ஷன்
அவரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் பீர் பாட்டிலால்
தர்ஷன் தலையில் அடித்துள்ளார். இதைப்பார்த்த அங்கு வந்த ஓம்பிரசாந்த்தின்
நண்பர் அரவிந்த் மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து கணேஷை
தாக்கியுள்ளனர்.
இதனால் கணேஷ் ஓடியுள்ளார். அவரை விரட்டிச் சென்று
தாக்கியுள்ளனர். அப்போது தர்ஷன் திடீரென கணேஷ் கையில் வைத்து இருந்த பீர்
பாட்டிலை பிடுங்கி உடைத்து கணேஷின் கழுத்தில் குத்தியதில் கணேஷ் பலத்த
காயத்துடன் கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள்
கணேஷை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று பின் மேல்
சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு
கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால் கழுத்தில் பலத்த பாட்டில் குத்து காயம்
காரணமாக மருத்துவமனை செல்லும் வழியிலேயே கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கணேஷ் கொல்லப்பட்டது தொடர்பாக தர்ஷன், ஓம்பிரசாத், அரவிந்த் அவரது நண்பர் ஆகியோரை வில்லிவாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

No comments:
Post a Comment