ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை அடுத்து அதிமுக சார்பில் அவசர ஆலோசனை
கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் துவங்கியது. இதில்
டிடிவி ஆதரவு மாவட்டச்செயலாளர்கள் 6 பேரையும் நீக்கும் முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆர்.கே.இடைத்தேர்தலில் அதிமுகவின்
தோல்வியை ஒட்டி, ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக அவசர ஆலோசனை கூட்டம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. அமைச்சர்கள் மற்றும் முக்கிய
நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இடைத்தேர்தல் டிச.21 அன்று
நடைபெற்றது. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் 40
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இரட்டை இலை
சின்னம் கிடைத்த பின்னர் ஆர்.கே.நகரில் ஏற்கனவே வெற்றிப்பெற்று
எம்.எல்.ஏவாக இருந்த மதுசூதனன் செல்வாக்குடன் இந்த தேர்தலில் அதிமுக
சார்பில் போட்டியிட்டார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர்,
அமைச்சர்கள் என அரசின் அத்தனை துறையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். டிடிவி
தினகரனுக்கு புதிய சின்னம் வழங்கப்பட்டது. இரட்டை இலை வெற்றியை
பெற்றுத்தரும் டிடிவி தினகரன் கணிசமான வாக்குகள் பெறுவார் என்று
எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தினகரன் பெரிய அளவிலான வாக்கு
வித்தியாசத்தில் திமுக, அதிமுகவை தோற்கடித்தார்.
திமுகவுடன்
கைகோர்த்து தினகரன் இந்த வெற்றியை பெற்றதாக அமைச்சர்கள் குற்றம்
சாட்டியிருந்தனர். இந்நிலையில் இன்று அதிமுக வழ்காட்டுக்குழு தலைவர் இணை
தலைவர் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம்
நடந்தது. கூட்டத்தில் அதிமுகவின் தோல்வி பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
டிடிவி
ஆதரவாளர்கள் தங்கத்தமிழ்ச்செல்வன், கலைராஜன், வெற்றிவேல், ரங்கசாமி,
பார்த்திபன், பாப்புலர் முத்தையா(வேலூர்)உள்ளிட்ட 6 மாவட்டச்செயலாளர்கள்
அதிமுகவிலேயே நீடிக்கின்றனர்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டு சுயேச்சை
வேட்பாளர் தினகரனை வெற்றிபெற வேலை செய்ததாக டிடிவி ஆதரவு
மாவட்டச்செயலாளர்கள் மேற்கண்ட 6 பேரையும் நீக்கும் முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என
எதிர்பாக்கப்படுகிறது.

No comments:
Post a Comment