மாம்பலம் கனரா வங்கி ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் கருவி பொருத்தி வாடிக்கையாளர்
பணத்தை அபகரிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை
மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் நேற்று
மாலை மர்ம நபர் ஒருவர் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி விட்டு சென்றுள்ளார்.
எதிர்பாராத விதமாக வங்கி ஏடிஎம்-ல் பணம் போட வந்த ஊழியர்கள் ஸ்கிம்மர்
கருவி பொருத்தி உள்ளதை கண்டு பிடித்தனர். உடனடியாக இது பற்றி தி.நகர் வங்கி
மேலளாளர் மகேஷிடம் தகவல் அளிக்க அவர் குறிப்பட்ட ஏடிஎம் மையத்துக்கு வந்து
ஆய்வு செய்தார்.
மர்ம நபர் ஏடிஎம்-ல் பொருத்திய ஸ்கிம்மர் கருவியை
எடுத்து குமரன் நகர் காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்து புகார் அளித்தார்.
குமரன் நகர் போலீஸார் சம்பந்தப்பட்ட ஏடிஎம்-க்கு சென்று விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட நபரின் உருவம் பதிவாகியுள்ளதா என்று
ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள ஏடிஎம்களில் இது போன்று
ஸ்கிம்மர் கருவி மூலம் திருடும் கும்பல் மீண்டும் கைவரிசையை காட்டத்
துவங்கியுள்ளது. துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் வாடிக்கயாளர்கள் பணம்
பறிபோக வாய்ப்புள்ளது.
எப்படி வேலை செய்கிறது ஸ்கிம்மர் கருவி:
ஸ்கிம்மர் கருவி என்பது நமது ஏடிஎம் கார்டில் உள்ள மேக்னட் சிப்பில் உள்ள நமது டேட்டாக்களை திருடும் கருவி ஆகும். நாம் ஏடிஎம் கார்டை நுழைக்கும் இடத்தில் அதற்கு மேல் பொருத்தப்படும் வகையில் தயாரிக்கிறார்கள்.
ஸ்கிம்மர் கருவி என்பது நமது ஏடிஎம் கார்டில் உள்ள மேக்னட் சிப்பில் உள்ள நமது டேட்டாக்களை திருடும் கருவி ஆகும். நாம் ஏடிஎம் கார்டை நுழைக்கும் இடத்தில் அதற்கு மேல் பொருத்தப்படும் வகையில் தயாரிக்கிறார்கள்.
கார்டை
நுழைக்கும் இடத்தில் அதை பொருத்தி விட்டு மர்ம நபர்கள் சிறிது தூரத்தில்
அமர்ந்து கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். நீங்கள் பணம் எடுக்க உங்கள்
ஏடிஎம் கார்டை நுழைக்கும்போது நொடியில் உங்கள் டேட்டாவை அந்த ஸ்கிம்மர்
மெஷின் திருடி விடும். உங்கள் அக்கவுண்டில் பணம் இருப்பதையும் உங்களுக்கான
ஏடிஎம் ரகசிய குறியீடுகளை அது எடுத்துவிடும்.
நீங்கள் சென்றவுடன்
பணம் எடுக்க வருவது போல் அந்த நபர் ஸ்கிம்மர் மெஷினை எடுத்து ஒரு மணி
நேரத்தில் உங்கள் டேட்டாவுடன் கூடிய கார்டை தயாரித்து உங்கள் பணத்தை
எடுத்து விடுவார்கள். இதற்கு உங்கள் ’பின்’ நம்பரை கவனிக்க வைஃபை வசதியுடன்
கூடிய கேமராவையும் பொருத்தியிருப்பார்கள்.
இதற்கு எச்சரிக்கையாக
இருக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஏடிஎம் கார்டு நுழைக்கும் இடத்தில்
வித்யாசமாக உணர்ந்தீர்கள் என்றால் ஜாக்கிரதையாக சோதித்த பின்னரே பணம்
எடுக்க கார்டை நுழைக்க வேண்டும்.
புதிதாக தற்போது வேறொரு மோசடியிலும்
மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். பணம் வெளியே வரும் இடத்தில் ஒரு சிறிய
பெட்டி போன்ற கருவியை பொருத்துகிறார்கள். அதன் மூலம் வாடிக்கையாளர்
எடுக்கும் பணம் வெளியே வராமல் அந்த பெட்டிக்குள்ளேயே சுருண்டுவிடும்.
வாடிக்கையாளர்
பணம் வரவில்லை என்று வங்கியில் புகார் அளிப்பார். ஆனால் பெட்டியை உருவி
வாடிக்கையாளர் பணத்தையும் எடுத்துச்சென்று விடுவார்கள். இது நவீன திருட்டு
ஆகும். ஆகவே வாடிக்கையாளர்களே உஷார்.
No comments:
Post a Comment