போயஸ் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனை வரவேற்கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில்
செய்தியாளர்களை சந்திந்த பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, “தமிழக மக்களின்
பணம் தவறான முறையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்கக் கூடிய
முயற்சியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளது வரவேற்கக்கூடிய ஒன்று”
என்று கூறினார்.
சசிகலா, தினகரன் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான
வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி முதல் தொடர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா என 3 மாநிலங்களில் 187 இடங்களில்
1800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையை நடத்தினர்.
இந்த நிலையில்
வெள்ளிக்கிழமை இரவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட
இல்லத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டது பெரும்
பரப்பரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment