பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய சோகம், பிரதமர் நரேந்திர
மோடியின் சிந்தனையற்ற செயல் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி
கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு,
நவம்பர் மாதம், பழைய 500 - 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு
அறிவித்தது. கள்ளப் பணம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனவும்
மத்திய அரசு வர்ணித்தது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8ம் தேதியான இன்று
ஒராண்டு ஆகும்நிலையில், இதை கறுப்பு தினமாக எதிர்கட்சிகள் கடை பிடித்து
வருகின்றன. அதேசமயம் கறுப்பு பண ஒழிப்பு தினமாக ஆளும் பாஜக கடை பிடித்து
வருகிறது.
இந்நிலையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக
விமர்சித்து ட்விட் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘பணமதிப்பு
நீக்க நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய சோகம். இதனால் கோடிக்கணக்கான மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையற்ற செயலால்
கோடிக்கணக்கான நேர்மையான இந்தியர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும்
அழிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்’’
எனக்கூறினார்.
No comments:
Post a Comment