காஷ்மீரில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கல்வீச்சு சம்பவங்கள்
90 சதவீதம் குறைந்து விட்டது, அமைதி திரும்பி வருகிறது. என அம்மாநில போலீஸ்
டிஜிபி எஸ்.பி.வைத் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
''ராணுவத்தினரின் தொடர் நடவடிக்கையால் பல பகுதிகளில் தீவிரவாதிகளின்
செயல்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி திரும்பி வருகிறது. காவல்துறை,
ராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் வெற்றி
கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நாள்தோறும் 40 முதல் 50 கல்வீச்சு
சம்பவங்கள் நடக்கும். தற்போது வாரத்திற்கு ஒரு சம்பவம் நடப்பதே அரிதாக
உள்ளது. மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த வெற்றி
கிடைத்துள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனையால் மட்டும் இந்த
சாதனை நடக்கவில்லை. கல்வீச்சு சம்பவங்களால் தங்களின் சொத்துகள்தான்
சேதமடைகின்றன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் சட்டம்-
ஒழுங்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பணமதிப்பு நீக்க
நடவடிக்கை காரணமாகவும் இந்த வெற்றி கிடைத்துள்ளது. தீவிரவாதிகளிடம் இருந்து
ரூபாய் செல்லாததாக போனதும் முக்கியக் காரணம். பயங்கரவாத தலைவர்கள் கைது
செய்யப்பட்டது அடுத்த காரணம். இந்த ஆண்டு மட்டும் 170 பயங்கரவாதிகள் கைது
செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களும்
அடக்கம். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனை இது'' என டிஜிபி வைத் கூறினார்.
No comments:
Post a Comment