மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம்
செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்த
மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
தேசிய குற்ற ஆவண பதிவேடு
புள்ளிவிவரங்களின்படி பலாத்கார குற்றங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்தில்
உள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 4,279 பெண்கள் பலாத்காரம்
செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,260 பேர் சிறுமிகள். 248 பெண்கள் கூட்டு
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் போபாலில் 10 வயது சிறுமியை 3 பேர்
கும்பல் பலாத்காரம் செய்த கொடூரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியது.
இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை
பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த
மசோதாவுக்கு அந்த மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. கூட்டு
பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும்
என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment