ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப்பின்
கன்னத்தில் அறைபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு என்று பாஜக தலைவர் அனில் சாஹ்னி
அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் துணை முதல்வர்
சுஷில் குமார் மோடி குறித்து தேஜ் பிரதாப் கூறிய கருத்துகளை அடுத்து அனில்
அவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய பாட்னா மாவட்ட பாஜக ஊடக பொறுப்பாளர் அனில் சாஹ்னி,
''தேஜ் பிரதாப் யாதவின் கன்னத்தின் அறைபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக
வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம்.
ஆர்ஜேடி தலைவர்களில் ஒருவரான
அவர் எங்களின் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி குறித்து அவதூறாகப்
பேசியுள்ளார். அவர் சுஷில் குமாரின் மகன் திருமணத்தன்று (டிச.3) வீடு
புகுந்து தாக்குவதாக மிரட்டினார். அதனால் நாங்களும் பதிலுக்கு இந்த
திட்டத்தை அறிவித்துள்ளோம்.
அத்துடன் யாதவ் வீட்டின் முன்னால்
ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம். இவற்றின் மூலம் சுஷில்குமார் மோடியிடம்
தேஜ் பிரதாப்பை மன்னிப்பு கேட்க வைப்போம்'' என்றார்.
அனில்
சாஹ்னியின் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள
நிலையில், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சுரேஷ் ரங்டா இதற்கு கண்டனம்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ''அனிலின்
வார்த்தைகளுக்கு பாஜக கண்டனம் தெரிவிக்கிறது. அவர் தன்னுடைய சொந்தக்
கருத்தையே கூறியுளார். இதற்காக அவர் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு
உட்படுத்தப்படுவார்'' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment