ஸ்டாலின், க.அன்பழகன் உடன் மருதுகணேஷ்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ்
போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக
அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக வாக்குப் பதிவுக்கு 2 நாள்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் ஆர்.கே.நகர்
இடைத்தேர்தல் தொடர்பான பணிகள் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின்
ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி செயலாளரும், பத்திரிகையாளருமான என்.மருதுகணேஷ்
அறிவிக்கப்பட்டார். மருதுகணேஷ் ஆர்.கே.நகரிலேயே பிறந்து வளர்ந்தவர்
என்பதாலும், அப்பகுதியிலேயே பத்திரிகையாளராக இருந்தவர் என்பதாலும் நடந்தே
தொகுதி முழுவதும் வலம் வந்தார்.
எனவே, இந்த முறையும் அவரையே வேட்பாளராக நிறுத்த ஸ்டாலின் முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்
இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆர்.கே.நகர்
வேட்பாளர் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதற்குப்
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர்
தேர்தலில் திமுக வெற்றிபெறும். காங்கிரஸைத் தொடர்ந்து பிற கட்சிகளிடம்
ஆதரவு கேட்கப்படும். ஜனநாயக முறைப்படி ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்க திமுக
தயாராக உள்ளது.'' என்று ஸ்டாலின் கூறினார்.
No comments:
Post a Comment