மெர்சல் பட விவகாரம் தொடர்பாக, “பாஜகவின் செயல்பாடு ஜனநாயக கொள்கைளுக்கு
முரணானது. பேச்சுரிமை மற்றும் படைப்பு சுதந்திரத்திற்கு ஆதரவாக திமுக துணை
நிற்கும்’’ என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மெர்சல்
திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றிய வசனம் இடம் பெற்றுள்ள காட்சிகளை
பாஜகவினர் நீக்குமாறு கோரி வருகின்றனர். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் அவர் ‘‘பாஜகவின் செயல்பாடு ஜனநாயக கொள்கைகளுக்கு
முரணானது. பேச்சுரிமை மற்றும் படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும்
துணை நிற்கும்’’ எனக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment