மெர்சல் பட விவகாரத்தில் தேவையற்ற அழுத்தம் தரப்படுவதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது
தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மெர்சல் திரைப்படத்தின் சில
காட்சிகள் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற மத்திய அரசின்
திட்டங்களை விமர்சிப்பதாக இருப்பதால், அக்காட்சிகள் நீக்கப்படவேண்டும் என்ற
அரசியல் அழுத்தம் தரப்படுகிறது என அறிகிறேன்.
பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் இத்திட்டங்கள் குறித்த
கோடிக்கணக்கான மீம்ஸ்கள் போன்ற கருத்துப் பதிவுகள் வந்தவண்ணம் இருப்பது
அரசுக்கும், பாஜகவுக்கும் தெரியாதா. இவற்றின் மீது ஏன் நடவடிக்கை
எடுக்கவில்லை.
அதுமட்டுமல்லாது ஜிஎஸ்டி பற்றி பல்வேறு
தரப்பினர்களும் எதிர் கருத்து தெரிவித்து இருக்கும்போது, இது பற்றிய
வசனங்கள் இடம்பெற்றிருப்பதில் தவறில்லை. மெர்சல் திரைப்பட விவகாரத்தில்
தேவையற்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது'' என்று
சரத்குமார் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment