சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது. சென்னையில் இடியுடன் கூடிய கனமழை தொடரக் கூடுமாம்.
மும்பையில் பெய்த பேய் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இன்னமும் இயல்பு நிலையில் இருந்து மீளவில்லை.
இந்நிலையில் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி
வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை,
நுங்கம்பாக்கம், துரைப்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், உள்ளிட்ட பல
பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
நின்று நிதானமாக கனமழை கொட்டி வருகிறது. இதனிடையே சென்னையில் அடுத்த சில
நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை தொடர்பான
தனியார் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment