திருவனந்தபுரத்தில் நேற்றிரவு பாஜகவின் மாநிலத் தலைமையகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் அடித்து
சூறையாடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் வீட்டை பாஜக
தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த மோதலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று இரு கட்சித் தலைவர்களும்
தெரிவித்தாலும் அது முடிவின்றித் தொடர்கிறது.
கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட்(மா) கட்சியினருக்கும்,
பா.ஜ.க.வினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் சம்பவங்கள் நடைபெற்று
வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பவுடிகோனம் பகுதியில் இரு
கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தில் நான்கு பேர்
காயமடைந்தனர்.
வியாழக்கிழமையன்று இரவு, இரு கட்சியினருக்கும் இடையே மறுபடியும் மோதல்
வெடித்துள்ளது. இம்மோதல் சம்பவத்தில் பாஜக மாநில அலுவலகத்தை மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் சூறையாடியுள்ளனர்.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி
பாலகிருஷ்ணன் வீட்டின் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கல்லெறிந்ததில் வீட்டின் சன்னல் கண்ணாடிகளும், கார் கண்ணாடிகளும் உடைந்து
நொறுங்கின.
இதேபோல் இரு கட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களின் வீடுகளும்
வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் இரு கட்சித்
தொண்டர்களுக்கிடையே மோதலும் நடைபெற்றுள்ளது. இதையடுத்துத் தலைவர்களின்
வீடுகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பதற்றம்
அதிகரித்துள்ளது.

No comments:
Post a Comment