
தமிழகத்தில் இந்திய முறை படிப்புகளான சித்த மருத்துவம் , யோகா,
யுனானி, இயற்கை மருத்துவம் , ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 2
முதல் ஆகஸ்ட் 30 வரை வழங்கப்படுகிறது. இந்திய முறை மருத்துவ
படிப்புகளுக்கான அறிவிப்பில் மொத்தம் 6 அரசு இந்திய முறை கல்லுரிகளில் 396
இடங்களும் , 22 தனியார் கல்லுரிகளில் 859 அரசு ஒதுக்கீடு இடங்களும் உள்ளன .
மத்திய அரசின் ஆயுஷ் துறையால் அங்கிகரிக்கப்படும் இட ஒதுக்கீட்டின் நிலை
மாறுபடும்
தமிழகத்தில் அரும்பாக்கம் சித்தா மருத்துவ கல்லுரிகள், திருமங்கலம்
ஹோமியோபதி கல்லுரிகள், நாகர் கோவில் கோட்டார் அரசு ஆயுர் வேதக் கல்லுரி,
பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லுரி, போன்ற கல்லுரிகளில் விண்ணப்பம்
நேரடியாகப் பெறலாம் . தமிழகத்தில் பிளஸ் 2 மதிபெண் அடிப்படையில்
விண்ணப்பங்கள் பெறலாம் .
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும் ,தாழ்த்தப்பட்ட
பிரிவினர்க்கு 100 ரூபாய விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து அனுப்ப வேண்டிய நாள் ஆகஸ்ட் 30க்குள் விண்ணப்ப விவரங்களை சரியாக
பூர்த்தி செய்ய வேண்டும் .
இந்திய முறை படிப்புகளுக்கான சித்தா, யுனானி, இயற்கை முறை, யோகா, ஹோமியோபதி
போன்ற படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பிய பின்
கல்லுரி சேர்க்கைக்காக அழைக்கப்படுவார்கள் .
தொடர்ந்து தகவல்களை பெற www.tnhealth.org இணையத் தளத்தை தொடர்ந்தால்
அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம் .
நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பை தொடர இந்தாண்டு பல்வேறு சிக்கலில்
மாணவர்கள் இருக்கும் நிலையில் இந்திய மருத்துவ முறைகளில் பல மாணவர்களை
இந்தாண்டு திரும்ப செய்யும் என கருதப்படுகிறது .
ஏதோ ஒரு படிப்பை தக்கவைக்க அங்குமிங்கும் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களும்
மாணவர்களும் அலைந்த நிலையில் இருக்கின்றனர். மாணவர்களின் மருத்துவ
படிப்புக்கான விலக்குக்கு தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி
வருகின்றது .

No comments:
Post a Comment